2011-10-21 16:00:09

சியன்னா நகர் புனித கத்ரீன் பற்றிய சர்வதேச கருத்தரங்கு அக்.27-29


அக்.21,2011. சியன்னா நகர் புனித கத்ரீன் புனிதராக அறிவிக்கப்பட்டதன் 550ம் ஆண்டை முன்னிட்டு “கத்ரீனாவும் அவரது மரபுரிமையும்” என்ற தலைப்பில் இம்மாதம் 27 முதல் 29 வரை உரோமிலும் சியன்னாவிலும் சர்வதேச கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது.
இக்கருத்தரங்கு குறித்து நிருபர் கூட்டத்தில் இவ்வெள்ளிக்கிழமை பேசிய திருப்பீட வரலாற்று அறிவியல் கழகத் தலைவர் பேரருட்திரு Bernard Ardura, புனித கத்ரீன் திருப்பீடத்துக்கு ஆற்றிய பணிகள் குறித்து விளக்கினார்.
1461ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி திருத்தந்தை 2ம் பத்திநாதரால் புனிதராக அறிவிக்கப்பட்டார் புனித கத்ரீன். இப்புனிதரின் இறையியல் அறிவின் ஆழத்தை அங்கீகரிக்கும் விதமாக 1970ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி திருத்தந்தை 6ம் பவுல், திருச்சபையின் மறைவல்லுனர் எனவும் இப்புனிதரை அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.