அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
அக் 20, 2011. அமெரிக்க ஐக்கிய நாட்டில் பெண் துறவறத்தாரின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில்
குறிப்பிடத்தகும் வகையில் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு 60ஆயிரத்து
642 ஆக இருந்த பெண் துறவிகளின் எண்ணிக்கை தற்போது 46 ஆயிரத்து 451 ஆகக் குறைந்துள்ளதாக
கலிஃபோர்னியாவில் இடம்பெற்ற பெண் துறவு சபைகளின் தலைமைத்துவக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. வரும்
ஆண்டில் இவ்வெண்ணிக்கை மேலும் 2787 குறையும் என்ற கவலையும் வெளியிடப்பட்டுள்ளது.