2011-10-19 15:01:00

இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகள் தொலைகாட்சிப் பெட்டிக்கு முன் செலவிடும் நேரத்தை பெற்றோர் மிகவும் குறைக்க வேண்டும்


அக்.19,2011. தவழும் குழந்தைகள் தொலைகாட்சிப் பெட்டிக்கு முன் செலவிடும் நேரத்தை பெற்றோர் மிகவும் குறைக்க வேண்டும் என்று அமெரிக்காவின் மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்கக் குழந்தைகள் நலக்கழகம் இச்செவ்வாயன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குழந்தைகளுக்கு எவ்வகையிலும் கல்வி புகட்ட முடியாதென்று வலியுறுத்திக் எச்சரித்துள்ளது.
1999ம் ஆண்டு அமெரிக்காவில் இது போன்ற ஓர் எச்சரிக்கை வெளிப்பட்டது என்பதை சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, இரண்டு வயதுக்குக் குறைந்த குழந்தைகளை தொலைக்காட்சி பெட்டிக்கு முன் அமர்த்திவிட்டு, பெற்றோர் தங்கள் பணிகளில் ஈடுபடுவது அமெரிக்க குடும்பங்களில் பெரிதும் பரவிவரும் ஓர் ஆபத்து என்று கூறியுள்ளது.
இரு வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு ஏற்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் தொலைகாட்சிகளில் இடம் பெறவில்லை என்பதுடன், இவ்வாறு நேரத்தைச் செலவிடும் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் பழகும் திறமையையும் இழந்து விடுகின்றனர் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.