2011-10-17 15:44:31

சீரோ மலபார் ரீதியின் பிரதிநிதிகள் குழு திருத்தந்தையுடன் சந்திப்பு


அக்.17,2011. கல்வி,சமூக மற்றும் பிறரன்பு நிறுவனங்கள் மூலம் ஆற்றும் பணிகளுக்காக மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இந்தியாவின் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்க சபை, மதவாத அமைப்புகளின் சந்தேகப் பார்வை மற்றும் வன்முறைகள் கண்டு மனம் தளராமல் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
சீரோ மலபார் ரீதியின் புதியத் தலைவர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி மற்றும் அச்சபையின் பிரதிநிதிகள் குழுவை இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, தாங்கள் வாழும் பகுதியின் அமைதி மற்றும் இணக்கவாழ்வை மனதிற்கொண்டு அனைவரும் ஒவ்வொரு குடிமகனின் மற்றும் திருச்சபையின் நலனுக்காக உழைக்க வேண்டும் என்றார்.
இந்தியத் திருச்சபையில் தேவ அழைத்தல்கள் பெருகிவருவது குறித்த தன் மகிழ்ச்சியையும் வெளியிட்ட பாப்பிறை, குருத்துவப் பயிற்சியில் எதிர்நோக்கப்படும் சவால்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.
இளையோருக்கென சீரோமலபார் ரீதி திருச்சபை ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டியதுடன், ஏனைய ரீதி ஆயர்களுடன் கொண்டிருக்க வேண்டிய ஒத்துழைப்பின் தேவை குறித்தும் வலியுறுத்தினார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.