2011-10-15 14:50:08

தாக்குதலை எதிர்கொண்டுள்ள எகிப்து கிறிஸ்தவர்கள் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கர்தினால் வலியுறுத்தல்


அக்.15,2011. எகிப்தில் கடந்த ஞாயிறன்று அமைதியாகப் போராட்டம் நடத்திய கிறிஸ்தவர்கள் மீது இராணுவம் தாக்குதலை நடத்தியிருந்தாலும், கிறிஸ்தவர்கள் உண்மையான குடிமகன் என்ற உணர்வுடன் வாழுமாறு கேட்டுக் கொண்டார் கர்தினால் Antonios Naguib.
எகிப்து நாட்டுக் கத்தோலிக்கரின் தலைவரான கர்தினால் Naguib, ZENIT செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கிறிஸ்தவர்கள் தங்களோடு வாழும் அனைத்துச் சகோதர சகோதரிகளுடன் சகோதரத்துவ உணர்வுடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்.
முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எகிப்தில் கிறிஸ்தவர்கள் 10 விழுக்காட்டினர்.
கடந்த ஞாயிறு தாக்குதலில் சுமார் 26 கிறிஸ்தவர்கள் உயிரிழந்தனர்







All the contents on this site are copyrighted ©.