2011-10-14 16:16:54

பேரிடர் தடுப்பு நடவடிக்கை ஒவ்வொருவரின் அன்றாடக் கவலையாக இருக்க வேண்டும் - ஐ.நா.பொதுச் செயலர்


அக்.14,2011. பேரிடர் தடுப்பு நடவடிக்கை ஒவ்வொருவரின் அன்றாடக் கவலையாக இருக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பேரிடர்களைத் தடுப்பதற்கு உலகிற்கு இருக்கும் சக்தியைவிட பேரிடர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது என்று பான் கி மூன் மேலும் கூறினார்.
இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வோர் ஆண்டும் 10 கோடி இளையோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர்களில் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஆற்றுப்படுகைகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளைவிட இவ்வாண்டு 114 விழுக்காடும், புயல் உருவாகும் கடற்கரையோரங்களில் 192 விழுக்காடும் அதிகரித்திருப்பதாக ஐ.நா.பேரிடர் குறைப்பு அலுவலகம் அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.