2011-10-11 15:06:57

சிரியாவின் இன்றைய நிலைகள் குறித்து அந்நாட்டு கிறிஸ்தவர்கள் கவலை


அக் 11, 2011. சிரிய நாட்டு அரசு வீழ்ச்சியடைந்து அதன் வழி உள்நாட்டு போர் இடம்பெற்றால் அது கிறிஸ்தவர்களுக்கு மிகப்பெரும் தீமைகளைக் கொணரும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார் சிரியாக் கத்தோலிக்க சபையின் முதுபெரும் தலைவர் மூன்றாம் Younan Ignatius Joseph.
கடவுளின் பெயரால் இடம்பெறும் போர் என்பது அரசியல் போராட்டத்தைவிட பெரும் தீமைகளைக் கொணர்வதாக இருக்கும் என்று கூறிய முதுபெரும் தலைவர், சிரியாவிற்கு தேவைப்படுவது அரசியல் சீர்திருத்தங்களேயொழிய, மோதல்கள் வழியான ஆட்சி மாற்றம் அல்ல என்றார்.
பல கட்சிகள் கொண்ட அரசியல் அமைப்பு, கருத்துச்சுதந்திரம் என பல்வேறு அரசியல் சீர்திருத்தங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் தேவைப்படுவதாகவும், அதற்கு மேற்கத்திய நாடுகள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் முதுபெரும் தலைவர் Younan.








All the contents on this site are copyrighted ©.