2011-10-11 15:07:13

எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு, அரசின் செயல்பாடின்மையே காரணம்


அக் 11, 2011. எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதலுக்கும் இரத்தம் சிந்தல்களுக்கும் அந்நாட்டு அரசின் செயல்பாடின்மையே காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர் தலத்திருச்சபைத் தலைவர்கள்.
எகிப்தில் கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரையில் சட்டத்தின் ஆட்சி, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்றார் ஆயர் அந்தோனியுஸ் மினா.
கிறிஸ்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதி ஊர்வலம் நடத்திய கிறிஸ்தவர்கள் மீது முதலில் இஸ்லாமிய தீவிரவாதிகளும் பின்னர் எகிப்து இராணுவமும் தாக்குதல் நடத்தி 25க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதற்கும் 200 பேர் காயமடைதலுக்கும் காரணமானது குறித்து கருத்து வெளியிட்ட குரு Rafic Greiche, கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல பல இஸ்லாமியர்களும் நாட்டின் வருங்காலம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையே, அமைதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அதனால் பாதிக்கப்பட்ட மற்றும் பலியான மக்களுக்கென மூன்று நாள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளார் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபை முதுபெரும் தலைவர் மூன்றாம் Shenouda.
இந்த மூன்று நாட்களும் செபத்திலும் உண்ணா நோன்பிலும் செலவழிக்கப்படும் எனவும் அறிவித்தார் அவர்.








All the contents on this site are copyrighted ©.