2011-10-10 15:39:45

கத்தோலிக்க கோவில் கட்டுவதற்கான அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளது இரஷ்ய அரசு


அக்.10,2011. இரஷ்யாவின் வடகிழக்கு நகர் Pskov வில் கத்தோலிக்க கோவில் ஒன்றை கட்டுவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது குறித்து கவலையை வெளியிட்டுள்ளார் மாஸ்கோ பேராயர் Paolo Pezzi.
Pskov கத்தோலிக்கர்கள் மிகுந்த பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக கவலையை வெளியிட்ட பேராயர், கோவில் கட்டுவதற்கென அரசு ஏற்கனவே வழங்கிய அனுமதி தற்போது புதுப்பிக்கப்படாததற்கான காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றார்.
10 ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கப்பட்டு தற்போது பங்குத்தள வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ள போதிலும், அனுமதிக்கப்பட்ட காலத்திற்குள் கோவில் கட்டப்படவில்லை என, அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளது அரசு.








All the contents on this site are copyrighted ©.