2011-10-08 14:31:30

ஒவ்வொரு வாரமும் 31 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு உதவும் மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் திட்டம்


அக்.08,2011. மெக்சிகோ நாட்டு மெக்சிகோ நகரில் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் 31 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு ஒவ்வொரு வாரமும் உதவும் நோக்கத்தில் மெக்சிகோ உயர்மறைமாவட்டம் பசிக்கு எதிரானப் புதிய நாள் என்ற நடவடிக்கையை இம்மாதம் 15ம் தேதி தொடங்கவிருக்கின்றது.
மெக்சிகோ உயர்மறைமாவட்டத்தின் உணவு வங்கி, “பசியில்லாத மெக்சிகோ” என்ற சுலோகத்துடன் சேதமாகாத உணவுப் பொருள்களைச் சேகரிப்பதற்கானத் திட்டத்தைத் தொடங்கவிருக்கின்றது.
கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் மெக்சிகோ உயர்மறைமாவட்டம், ஒன்பதாவது ஆண்டாக, வருகிற 15ம் தேதி இதனைச் செயல்படுத்தவிருக்கின்றது.
இவ்வாண்டு 250 டன்கள் உணவுப் பொருள்களைச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் 13 விழுக்காட்டுச் சிறார் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றனர் என்று தேசிய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.