2011-10-08 14:33:22

ஐரோப்பாவிலும் ஆப்ரிக்காவிலும் தட்டம்மை தொடர்ந்து பரவி வருகிறது - WHO


அக்.08,2011. ஐரோப்பாவிலும் ஆப்ரிக்காவிலும் கடந்த ஆறு மாதங்களாகத் தட்டம்மை தொடர்ந்து பரவி வருவதாகவும் அமெரிக்காவில் இது குறைந்த அளவில் பரவி வருவதாகவும் WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் கூறியது.
இந்த ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை 26,025 பேருக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டிருப்பதாக 40 ஐரோப்பிய நாடுகள் பதிவு செய்துள்ளன எனவும், பிரான்ஸ் நாட்டில் இப்பாதிப்பு அதிகம் எனவும் WHO கூறியது.
பிரான்சில் 14,025 பேருக்கும் ஆப்ரிக்காவில் காங்கோ சனநாயகக் குடியரசில் மட்டும் 1,03,000 பேருக்கும் தட்டம்மை கண்டுள்ளது என அந்நிறுவனம் கூறியது.








All the contents on this site are copyrighted ©.