2011-10-06 14:34:42

மியான்மார் கச்சின் பகுதியிலிருந்து புலம் பெயர்ந்துள்ள மக்களுக்காக அக்டோபர் 9 சிறப்பான செபநாள்


அக்.06,2011. மியான்மாரில் கச்சின் பகுதியில் நிலவி வரும் கலவரங்களால் புலம் பெயர்ந்துள்ள மக்களுக்காக அக்டோபர் 9, வருகிற ஞாயிறு சிறப்பான செபநாள் கடைபிடிக்கப்படும் என்று மியான்மார் ஆயர் ஒருவர் கூறினார்.
துன்புறும் மக்களுடன் கத்தோலிக்கர்கள் தங்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்காக செபிப்பதுடன், அன்று திரட்டப்படும் தொகையை அம்மக்களின் தேவைகளுக்கு அளிக்கும்படியும் Banmaw மறைமாவட்ட ஆயர் Raymond Sumlut Gam இப்புதனன்று வேண்டுகோள் விடுத்தார்.
மியான்மார் அரசுக்கும், கச்சின் பகுதி மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களால் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு கூடாரங்கள் அமைப்பதிலும், அவர்களுக்குத் தேவையான உணவு, மற்றும் மருத்துவ உதவிகள் செய்வதிலும் மறைமாவட்டத்தின் சமூகப் பணிக்குழு ஈடுபட்டுள்ளதென்று இப்பணிக் குழுவின் இயக்குனர் அருள்தந்தை Paul Lahpai Aung Dang கூறினார்







All the contents on this site are copyrighted ©.