2011-10-04 14:56:21

உரோம் நகரில் லாத்தரன் திருமுழுக்குத் தலத்தை காண உதவும் முப்பரிமாண தொழில் நுட்பம்


அக்.04,2011. உரோம் நகரில் உள்ள ஒரு பழம்பெரும் நினைவுச் சின்னத்தை முப்பரிமாணத்தில் காணும் தொழில் நுட்பத்தை வத்திக்கானும் ஸ்வீடன் நாடும் இணைந்து மேற்கொண்டுள்ளது.
உரோம் நகரில் உள்ள புகழ்பெற்ற புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்திற்கு அருகே உள்ள உரோம் லாத்தரன் திருமுழுக்குத் தலத்தை ஆய்வு செய்ய விரும்புவோருக்கு உதவியாக இந்த முப்பரிமாண தொழில் நுட்பம் அமைந்துள்ளதென்று கத்தோலிக்க செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
நான்காம் நூற்றாண்டு முதல் 16ம் நூற்றாண்டு வரை பல்வேறு நிலைகளில் கட்டி முடிக்கப்பட்ட இந்தப் பழம்பெரும் நினைவுச் சின்னங்களின் சுவர்கள், கூரை ஆகியவற்றில் பதிந்துள்ள பல கருவூலங்களை ஆய்வதற்கு இந்தத் தொழிநுட்பம் உதவியாக இருக்கும் என்று இத்திட்டத்தை முன்னின்று நடத்தும் கிறிஸ்தவ புதைபொருள் பாப்பிறை நிறுவனத்தைச் சேர்ந்த Olof Brandt செய்தியாளர்களிடம் கூறினார்.
பல்வேறு கோணங்களில் 5000க்கும் மேற்பட்ட புகைப்படங்களில் இந்த நினைவுச் சின்னம் பதிவு செய்யப்பட்டு, அப்புகைப்படங்களைத் தொகுத்து இந்த முப்பரிமாண தொழில் நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது என்று இத்தொழில்நுட்பக் குழவைச் சார்ந்த Hakan Thoren என்ற ஸ்வீடன் நாட்டு பணியாளர் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.