2011-10-03 15:38:36

விசுவாசத்திற்கும் பகுத்தறிவுவாதத்திற்கும் இடையேயான தொடர்பை திருத்தந்தை விளக்கியது குறித்து திருப்பீடப் பேச்சாளர்


அக் 03, 2011. விசுவாசத்திற்கும் பகுத்தறிவுவாதத்திற்கும் இடையேயான தொடர்பைப் புரிந்து கொள்ளும் வகையிலான ஒரு சிறந்த உள்ளொளியை அண்மை ஜெர்மன் திருப்பயணத்தின் போது திருத்தந்தை வழங்கினார் என்றார் திருப்பீடப் பேச்சாளர்.
ஃப்ரெய்பூர்க் நகரில் குருமாணவர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரை குறித்து, தன் இவ்வார தொலைக்காட்சித் தொடரில் கருத்துக்களை வழங்கிய திருப்பீடப் பேச்சாளர் குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி, பகுத்தறிவு வாதமும் அறிவியலும் நிரம்பி வழியும் இன்றைய உலகு, பகுத்தறிவு வாதத்திற்கு ஒத்துவராத எதையும் ஒதுக்கி வைக்கும் போக்கிலும் நன்மைகள் உள்ளன என்ற திருத்தந்தையின் கருத்தை விளக்கினார்.
விசுவாசம் என்பது அனைத்திற்கும் அர்த்தம் தரவல்லதாய், உள்ளார்ந்த அறநெறி சார்ந்த நோக்கத்தைத் தருவதாய், இறைவனை நோக்கிய பாதையை தெளிவுபடுத்துவதாய் இருக்கிறது என விளக்கிய திருத்தந்தை, அதனைப் புரிந்து கொள்வதும், அதற்கு திறந்த மனதாய் செயல்படுவதும், அதனைக் கற்றுக்கொள்வதும் அவசியம் என்பதைக் குறிப்பிட்டார் என்றார் குரு லொம்பார்தி.
கல்வி கற்பது என்பது இன்றைய குருத்துவப்பயிற்சிக்கு இன்றியமையாதது, இதன் மூலமே நாம் உறுதிப்பெற்றவர்களாக வளர்ந்து, நம் விசுவாசத்திற்கான காரணத்தை எடுத்துரைக்க முடியும் என திருத்தந்தை தன் ஜெர்மன் பயணத்தின்போது எடுத்துரைத்ததையும் சுட்டிக்காட்டினார் திருப்பீடப் பேச்சாளர் குரு லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.