2011-10-03 15:47:34

பெண்கள் வாழ சிறந்த நாடு: இந்தியாவுக்கு 141வது இடம்


அக் 03, 2011. உலகில் பெண்கள் வாழ சிறந்த இடம் எது என்ற கருத்து கணிப்பை அமெரிக்காவைச் சேர்ந்த, "நியூஸ்வீக்' என்ற நாளிதழ், 165 நாடுகளில் நடத்தியதில், இந்தியா, 141வது இடத்தை பெற்றுள்ளது.
இதன் மூலம், இந்தியா சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகளை கடந்தாலும், அரசியல், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பில் பெண்கள் இன்னும் முன்னேற்றம் அடையவில்லை என்பது காட்டப்பட்டுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு ஏற்ற நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்தும், இதற்கு அடுத்து, சுவீடன், கனடா, டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகளும், முதல் ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இதே நேரத்தில் மாலி, காங்கோ, ஏமன், ஆப்கானிஸ்தான், சாடு ஆகிய நாடுகள் கடைசி ஐந்து இடங்களை பெற்றுள்ளன. இந்தியாவை விட, சிறிய நாடுகளாக இருக்கும், வங்கதேசம், நேபாளம், பூடான், மியான்மர், இலங்கை உள்ளிட்ட நாடுகள், இந்தியாவை விட, மேலிடத்தில் உள்ளன. இப்பட்டியலில், முதல் 20 இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு பிலிப்பைன்ஸ் ஆகும்.







All the contents on this site are copyrighted ©.