2011-10-03 15:40:54

அகில உலக முதியோர் நாளையொட்டி இலங்கையின் தலைநகரில் ஊர்வலம்


அக்.03,2011. அக்டோபர் 1, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட அகில உலக முதியோர் நாளையொட்டி, இலங்கையின் தலைநகரில் 700க்கும் மேற்பட்ட முதியோர், சமுதாய ஆர்வலர்கள் மற்றும் அகில உலக நலவாழ்வு நிறுவனத்தின் பிரதிநிதிகள் இணைந்து, ஊர்வலம் ஒன்றை நடத்தினர்.
முதியோருக்கென ஓர் உலக நாளை உருவாக்கி, மேடைகளில் நின்று அவர்களைப் பற்றி பேசுவதை விட, அவர்களது தேவைகளை தீர ஆராய்ந்து அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்வதே இந்த நாளைச் சிறப்பிக்கும் ஒரு சிறந்த வழி என்று இவ்வூர்வலத்தில் கலந்துகொண்ட 70 வயது நிறைந்த Alfred Kulas கூறினார்.
இலங்கை அரசு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, அந்நாட்டில் உள்ள 2 கோடி மக்கள் தொகையில் 16 இலட்சம் மக்கள் 60 வயதைக் கடந்தவர்கள் என்று தெரிகிறது.
இலங்கையில் உள்ள 11 மறைமாவட்டங்களில் 30க்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் வழியே தலத்திருச்சபை இவர்களுக்குப் பணிகள் செய்து வருகின்றன என்று முதியோர் நலப் பணிகள் கழகத்தின் இயக்குனர் அருள்தந்தை Saveri Viton Aritappar, UCAN செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.