2011-09-30 16:10:08

உலகளாவிய ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் குறைவு


செப்.30,2011. கடந்த ஆண்டில் நாடுகள் எதிர்நோக்கிய நிதி நெருக்கடியால், அவ்வாண்டில் உலக அரசுகள் புதிய ஆயுதங்களை வாங்கிய அளவு குறைந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
“2010ம் ஆண்டில் உலகளாவிய ஆயுத வியாபாரம்” என்ற தலைப்பில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக் காங்கிரஸ் அவை வெளியிட்ட ஆய்வில், இது 2009ம் ஆண்டைவிட 2010ம் ஆண்டில் 38 விழுக்காடு குறைவு என்று தெரிய வந்துள்ளது.
2009ம் ஆண்டில் 6,520 கோடி டாலராக இருந்த ஆயுத வியாபாரம் 2010ம் ஆண்டில் 4,040 கோடியாகக் குறைந்தது என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
2010ம் ஆண்டில் ஆயுதங்கள் வாங்கியதில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக 28,420 கோடி ரூபாய் மதிப்புடைய ஆயுதங்களை இந்தியா வாங்கியதாக அமெரிக்க காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆயுதங்கள் வாங்கியதில் இந்தியா முதலிடமும், தாய்வான், சவுதி அரேபியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கியதில் இரஷ்யா முதலிடத்தில் உள்ளது. மேலும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்காவிடம் இருந்தும் இந்தியா பெற்றுள்ளது.
வளரும் நாடுகளுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தங்களில் அமெரிக்கா, ரஷ்யா ஆகியன முதல் 2 இடங்களில் உள்ளன.








All the contents on this site are copyrighted ©.