2011-09-27 13:26:56

ஐரோப்பியத் திருத்தல அதிபர்களின் கூட்டம் இங்கிலாந்தில் இடம்பெறுகிறது


செப் 27, 2011. ஐரோப்பாவின் திருத்தல அதிபர்களின் கூட்டம் இச்செவ்வாய் முதல் வெள்ளிவரை இங்கிலாந்தின் வல்சிங்காம் திருத்தலத்தில் இடம்பெற்று வருகிறது.
இங்கிலாந்தின் நாசரேத் என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் இடம்பெறும் இக்கூட்டத்திற்கு 'நற்செய்தி அறிவித்தலும் பக்தி முயற்சி நடவடிக்கைகளும்' என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளது.
வல்சிங்காம் திருத்தலத்தின் 950ம் ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்று வரும் இக்கூட்டம் குறித்து எடுத்துரைத்த அத்திருத்தல அதிபர் குரு ஆலன் வில்லியம்ஸ், கத்தோலிக்கத் திருத்தலங்களைக் கத்தோலிக்கரல்லாதோரும் பெருமளவில் சந்திக்க வருவதால் அவர்களின் ஆன்மீக ஏக்கத்தை நிறைவு செய்யும் விதமாக திருத்தலங்களின் நடவடிக்கைகள் இருக்கவேண்டும் என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் பல இலட்சக்கணக்கான திருப்பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பிரான்சின் லூர்து நகரின் ஆயர் Jacques Perrier இத்திருத்தலக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
ஐரோப்பியத் திருத்தல அதிபர்களின் கூட்டம் இங்கிலாந்தில் இருபது ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறுகிறது.








All the contents on this site are copyrighted ©.