2011-09-26 16:43:33

இந்தோனேசியாவில் கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டதற்கு மதத்தலைவர்கள் கண்டனம்


செப் 26, 2011. இந்தோனேசியாவின் சோலோ நகரில் கிறிஸ்தவக் கோவில் ஒன்று தாக்கப்பட்டது குறித்து அந்நாட்டின் மதத்தலைவன்ர்கள் தங்கள் வன்மையானக் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
ஞாயிறு வழிபாட்டை முடித்து விசுவாசிகள் வெளியேறிக் கொண்டிருந்தபோது இடம்பெற்ற தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்ட Nahdlatul Ulama என்ற இஸ்லாமியக் குழு, இது ஒழுக்க ரீதிகளுக்கு எதிரான காட்டுமிராண்டி நடவடிக்கை என அறிவித்துள்ளது.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக உரைத்த இந்தோனேசிய ஆயர் பேரவையின் அதிகாரி குரு அந்தோனியுஸ் பென்னி சுசெத்யோ, இது கடவுளுக்கு எதிரானச் செயல் என உரைத்ததுடன், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
கிறிஸ்தவர்களும் இசுலாமியர்களும் ஒற்றுமையாய் வாழும் சொல்லோ பகுதியில் இத்தகையதொரு தாக்குதல் நடந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது எனவும் கூறினார் அவர்.
இந்தோனேசியாவின் சோலோ நகரில் இடம்பெற்ற தற்கொலை வெடி தாக்குதலில், இத்தாக்குதலை நடத்தியவர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர்.







All the contents on this site are copyrighted ©.