2011-09-25 15:06:23

ஜெர்மன் கத்தோலிக்க மையக் குழுவினருக்கானத் திருத்தந்தையின் உரை


செப். 25, 2011. இக்காலத்திய மேற்கத்திய உலகு எதிர்நோக்கும் உண்மையான நெருக்கடி விசுவாசத்தின் நெருக்கடியாகும். நமது செல்வமிக்க மேற்கத்திய உலகத்தில் இந்த விசுவாசக் குறைபாட்டை நாம் காண முடிகின்றது. கடவுளின் நன்மைத்தனத்தின் அனுபவம் பலரிடம் இல்லை. அவர்கள், மையத்திருச்சபைகளின் மற்றும் அவற்றின் பாரம்பரிய அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில்லை. ஜெர்மன் கத்தோலிக்கத் திருச்சபையை எடுத்துக் கொண்டால் அது மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் அதில், உயிருள்ள கடவுள் மீது கொள்ளும் விசுவாசத்தின் சக்தி, அந்த ஆன்மீக பலம் குறைவுபடலாம். அமைப்புரீதியாக நம்மிடம் தேவைக்கு அதிகமானவை இருக்கின்றன, ஆனால் ஆன்மீக ரீதியில் போதுமானவை இல்லை என்பதை நேர்மையுடன் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். எனவே, இக்காலத்திய மேற்கத்திய உலகு எதிர்நோக்கும் உண்மையான நெருக்கடி விசுவாசத்தின் நெருக்கடி என்று சொல்ல விரும்புகிறேன். வளரும் நாடுகளிலிருந்து மேற்கத்திய உலகுக்கு வருகின்றவர்கள், மனித உறவுகளிலும் ஆன்மீக வட்டத்திலும் வறுமை இருப்பதைக் காண்கின்றனர். ஆதலால் விசுவாசப் புதுப்பித்தல் இன்றி அனைத்து அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் பலனற்றுப் போகும். எனவே கடவுளின் நன்மைத்தன அனுபவத்தை இழப்பவர்கள் அதனைக் கண்டு கொள்வதற்குப் புதிய இடங்கள் தேவை. சிறு செபக் குழுக்கள் அதற்கு உதவலாம். தவறாமல் செபிக்கக் கூடும் இக்குழுக்கள் தங்களது கடவுள் அனுபவத்தை வேலை செய்யும் இடங்களிலும் குடும்பங்கள் மற்றும் நண்பர் வட்டங்களிலும் பேசலாம்.








All the contents on this site are copyrighted ©.