2011-09-23 17:07:14

முஸ்லீம்கள், ஜெர்மனியின் அரசியல் அமைப்பை மதித்து நடக்குமாறு திருத்தந்தை வேண்டுகோள்


செப்.23,2011. பெர்லின் திருப்பீடத் தூதரகத்தில் ஜெர்மனியிலுள்ள சுமார் 40 இலட்சம் முஸ்லீம்கள் சார்பாக வந்த அம்மதப் பிரதிநிதிகள் குழுவை இவ்வெள்ளி காலை திருத்தந்தை சந்தித்தார். அக்குழுவிடம், முஸ்லீம்கள், ஜெர்மனியின் அரசியல் அமைப்பையும் அதிலுள்ள பன்மைத்தன்மையின் வரையறைகளையும் மதித்து நடக்கும் போது உரோமன் கத்தோலிக்கரின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அவர்கள் எதிர்பார்க்க முடியும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மேற்கு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பில், தாராளமயமாக்கப்பட்ட உலகில் ஒரு பன்முகச் சமுதாயத்திற்குப் போதுமான வழிவகைகள் உள்ளன. சமூகங்கள், அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஒத்திணங்க வேண்டும். ஒருவர் எம்மதத்தை அல்லது எந்தச் சமூகத்தைச் சார்ந்தவராயினும் அரசியல் அமைப்பால் பொதுவாக வடிவமைக்கப்பட்ட கூறுகளைச் செயல்படுத்த வேண்டும் என்றார்.







All the contents on this site are copyrighted ©.