2011-09-23 17:13:43

மியான்மார் நாட்டைக் கட்டியெழுப்புவதில் மதத்தலைவர்களின் ஈடுபாடு வலியுறுத்தப்பட்டுள்ளது


செப் 23, 2011. ஜனநாயகத்தை நோக்கி மியான்மார் நாடு சென்று கொண்டிருக்கும் வேளையில், நாட்டைக் கட்டியெழுப்புவதில் மதத்தலைவர்களின் ஈடுபாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டுக் கத்தோலிக்கர்.
நாட்டில் நல் மாற்றத்தைக் கொணர அரசியல் தலைவர்களுடன் இணைந்து உழைக்க வேண்டிய பொறுப்பு தலத்திருச்சபைக்கு உள்ளது என்றார் யன்கோன் பேராயர் சார்ல்ஸ் போ.
நாட்டின் சூழல்களை மேம்படுத்தவும், நிலையான அமைதியைப் பெறவும் மதத்தலைவர்களுடன் இணைந்து உழைக்க அரசியல் தலைவர்களும் முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார் பேராயர் போ. மதம் என்பது கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிப்போயுள்ள இந்த நாட்டில் அரசியல் தலைவர்கள் மதத்தலைவர்களைப் புறக்கணிக்க முயல்வது கவலை தருவதாக உள்ளது என மேலும் கூறினார் பேராயர்.








All the contents on this site are copyrighted ©.