2011-09-22 17:17:24

ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே அரசியல் வழிகள் மூலம் ஏற்படுத்தமுடியாத உறவை, மதங்களின் ஒன்றிணைந்த அணுகுமுறை மூலம் உருவாக்க முடியும்


செப் 22, 2011. ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே அரசியல் வழிகள் மூலம் ஏற்படுத்தமுடியாத உறவை, மதங்களின் ஒன்றிணைந்த அணுகுமுறை மூலம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டிற்கு அண்மையில் சென்று திரும்பிய கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியப் பிரதிநிதிகள் குழு.
வாஷிங்டனின் முன்னாள் பேராயர் தியோதர் மெக்காரிக் உட்பட நான்கு பேர் அடங்கிய குழு அண்மையில் ஆறு நாள் பயணத்தை ஈரானில் மேற்கொண்டு திரும்பியபோது இந்த நம்பிக்கை அக்குழுவால் வெளியிடப்பட்டது. ஈரானுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையேயான உறவில் அரசியல் ரீதியான முயற்சிகள் தோல்வியைச் சந்தித்துவரும் இன்றையக் காலக்கட்டத்தில், மதங்கள் மூலமான முயற்சிகள் பலன் தரும் என்றார் கர்தினால்.
அமெரிக்க உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானில் சிறைவைக்கப்பட்டிருந்த இரு அமெரிக்கர்கள், கிறிஸ்தவ-இஸ்லாம் பிரதிநிதிகளின் குழு இரானிலிருந்து திரும்பிய இரண்டே நாட்களில் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.