2011-09-22 17:22:41

இன்றைய உலகிற்குத் தேவைப்படுவது பாலங்களேயன்றி, சுவர்களல்ல


செப் 22, 2011. இன்றைய உலகிற்குத் தேவைப்படுவது பாலங்களேயன்றி, சுவர்களல்ல என சமூக நீதி குறித்த தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர் ஆஸ்திரேலிய ஆயர்கள். குற்றம்புரிபவர்கள் தண்டிக்கப்படுவது, சமூகத்தில் ஒழுங்கமைவையும் பாதுகாப்பையும் கொண்டுவர உதவலாம் என தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், குற்றவாளிகளின் மனித உரிமைகள் மதிக்கப்படுவதுடன் அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பாகவும் சிறை வாழ்க்கை இருக்க வேண்டும் எனவும் விண்ணப்பித்துள்ளனர். சிறை வாழ்க்கை பலவேளைகளில் தனிமைப்படுத்தப்படுவதாகவும், சித்ரவதைகள் நிறைந்ததாகவும் இருப்பதாகக் கவலையை வெளியிட்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர்கள், சிறைக்கைதிகளிடையே பணிபுரியும் குருக்களின் சேவையைப் பாராட்டியுள்ளனர். சிறைக்குள் கைதிகள் அநியாயமான முறையில் தண்டிக்கப்படும் வேளைகளில் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் எனக்கூறும் ஆஸ்திரேலிய ஆயர்களின் அறிக்கை, தண்டனை என்பது திருந்துவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டுமேயொழிய, மனங்கள் மேலும் கடினமாவதற்கு வழிவகுக்கக் கூடாது எனவும் விண்ணப்பித்துள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.