2011-09-21 15:27:17

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகள் இடர்துடைப்புப் பணிகளுக்குத் தடையாய் இருக்கின்றன - டார்ஜிலிங் ஆயர் கவலை


செப்.21,2011. பூட்டான், சீனா, நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப்புறத்திலுள்ள இமாலய மாநிலமான சிக்கிம் ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளவேளை, அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவுகளால் இடர்துடைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்ய இயலாமல் இருக்கின்றது என்ற கவலையைத் தெரிவித்தார் டார்ஜிலிங் ஆயர் Stephen Lepcha.
அண்மையில் இடம் பெற்ற நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிக்கிம் மாநிலத்தில் குன்றுப்பகுதிகள் மற்றும் சாலைகளில் பரவலாக கீறல்கள் ஏற்பட்டுள்ளன என்றுரைத்த ஆயர் Lepcha, இக்கீறல்களில் மழைத்தண்ணீர் விழுந்தால் அது நிலச்சரிவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
செப்டம்பர் 18ம் தேதி 40 வினாடிகள் இடம் பெற்ற நிலநடுக்கத்தில் இந்திய எல்லைப்பகுதியில் 60க்கும் மேற்பட்டோரும் நேபாளத்தில் குறைந்தது 20 பேரும் என 80க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இந்திய அரசும் 5,000த்துக்கு மேற்பட்ட இராணுவப் பணியாளரைச் சீரமைப்புப் பணியில் அமர்த்தியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.