2011-09-21 15:34:10

இலட்சக்கணக்கான இந்தியர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர்


செப்.21,2011. இந்தியாவின் சுமார் 121 கோடி மக்களில் 37 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்தியாவின் கிராமங்களில் ஒரு தனியாளின் ஒரு நாளைய உணவு, கல்வி மற்றும் நலவாழ்வு வசதிகளுக்கு 25 ரூபாயும் நகரங்களில் ஒரு தனியாளுக்கு 32 ரூபாயும் போதுமானது என்று திட்டக்குழு, இந்திய உச்சநீதிமன்றத்திடம் கூறியுள்ளது.
அரசு நடத்தும் நியாயவிலைக் கடைகள் வழியாகக் குறைந்த விலையில் உணவு மற்றும் சமையல் எண்ணெய், தற்சமயம் நாட்டின் 36 கோடிப் பேருக்கு வழங்கப்பட்டு வருவதாக அக்குழு மேலும் தெரிவித்துள்ளது







All the contents on this site are copyrighted ©.