ஆயர் மர்த்தினெல்லி : லிபியாவில் மக்கள் முழுநம்பிக்கையுடன் புதுவாழ்வைத் தொடங்கக் காத்திருக்கின்றனர்
செப்.21,2011. லிபியாவில் மக்கள் மத்தியில் நம்பிக்கைக் காற்று வீசத் தொடங்கியிருக்கின்றது
என்றும் மக்கள் ஒப்புரவையும் புதிய தொடக்கத்தையும் விரும்புகின்றனர் என்றும் டிரிப்போலி
அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஜொவான்னி இன்னோச்சென்சோ மர்த்தினெல்லி கூறினார். உரோமையில்
மருத்துவ சிகிச்சை பெற்று டிரிப்போலி திரும்பியுள்ள ஆயர் மர்த்தினெல்லி, லிபியாவில் இடம்
பெற்ற 40 வருட சர்வாதிகார ஆட்சி, ஆறு மாதப் போர் ஆகியவற்றுக்குப் பின்னர் தற்போது அந்நாட்டில்
அனைத்துத் தரப்பு மக்களும் புதிய நம்பிக்கையைக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது என்று
கூறினார். இதற்கிடையே, கடாஃபி ஆதரவாளர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் இடையேயான
போர் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் காயமடைவதும் தொடர்கின்றன
என்று ஊடகங்கள் கூறுகின்றன.