2011-09-14 15:23:56

வத்திகானின் பல சுற்றுப்பயணியர் தலங்கள் செப்டம்பர் மாத இறுதி ஞாயிறன்று இலவசமாகத் திறந்து விடப்படும்


செப்.14,2011. செப்டம்பர் மாத இறுதி ஞாயிறன்று வத்திக்கான் அருங்காட்சியகமும், ஆதிகிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகளும் மக்கள் பார்வைக்கு இலவசமாகத் திறந்துவிடப்படும் என்று இத்திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் உள்ள பல சுற்றுப்பயணியர் தலங்களைக் காண கட்டணங்கள் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் ஐரோப்பிய பாரம்பரிய நாட்கள் என்று கொண்டாடப்படும் நாட்களில் இத்தலங்கள் மக்கள் பார்வைக்கு இலவசமாகத் திறந்து விடப்படும்.
ஐரோப்பிய பாரம்பரிய நாட்கள் என்ற இத்திட்டத்தில் பல ஆண்டுகளுக்குப் பின் வத்திக்கானும் இணைவதால், வத்திகானின் பல சுற்றுப்பயணியர் தலங்கள் செப்டம்பர் 25 ஞாயிறன்று இலவசமாகத் திறந்து விடப்படும் என்று திருப்பீடத்தின் புனித தொல்பொருள் அகழ்வாராய்ச்சி கழகமும், வத்திக்கான் அருங்காட்சியகக் கழகமும் அறிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.