2011-09-14 15:47:47

செப்டம்பர் 15 வாழ்ந்தவர் வழியில்........ மார்க்கோ போலோ


இத்தாலியின் வெனிஸ் நகரில் ஏறத்தாழ 1254ம் ஆண்டு செப்டம்பர் 15ம்
தேதி பிறந்தார் மார்க்கோ போலோ. இத்தாலிய வணிகரான இவர், மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்று, செங்கிஸ்க்கானின் பேரனான குப்ளாய் கான் மன்னனைச் சந்தித்தார். அங்கு 17 ஆண்டுகள் குப்ளாய் கானுக்கு உதவியாக இருந்தார். குப்ளாய் கானின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்கோப்போலோ, பேரரசின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர அரச முத்திரை வழங்கப்பட்டது. தன் தாய் நாட்டிற்குத் திரும்பும் வழியில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். இவரது பயண நூல் இந்தியாவைக் குறித்த பல பெருமைகளை எடுத்துரைக்கின்றது.
தற்போதைய குஜராத் பகுதியில் உள்ள யோகிகள் பற்றியும் கூறுகின்றார். இவர்கள் சுமார் 150 -200 ஆண்டுகள் உயிர்வாழும் வல்லமை உடையவர்கள் என்றும் இவர்கள் மிகவும் சிறிதளவான உணவையே உண்பதாகவும் கூறியிருக்கின்றார். மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது. அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிறிஸ்தோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார்.
மொத்தம் 24 வருடங்கள் பல நாடுகளைத் தரிசித்த மார்க்கோ போலோ சுமார் 24,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பதையும் குறிப்பட வேண்டும்.
1323 இல் நோய்வாய்ப்பட்ட மார்க்கோ போலோ, 1324ம் ஆண்டு சனவரி 8ம் தேதி மறைந்ததாக கூறப்படுகின்றது.







All the contents on this site are copyrighted ©.