2011-09-12 15:58:15

பல்வேறு பிரச்சனைகளில், அன்புப் பணிகள் மூலம், கிறிஸ்துவின் பணியாளராய் நம்மால் பதில் சொல்லமுடியும் - சிங்கப்பூர் பேராயர்


செப்.12,2011. இயற்கைப்பேரிடர், சுற்றுச்சூழல் மாற்றம், குடியேற்றதாரர்களின் பிரச்சனைகள் என்று பல்வேறு பிரச்சனைகளில், அன்புப் பணிகள் மூலம், கிறிஸ்துவின் பணியாளராய் நம்மால் பதில் சொல்லமுடியும் என்று சிங்கப்பூர் பேராயர் நிக்கோலஸ் சியா (Nicholas Chia) கூறினார்.
மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள 30 நிறுவனங்களிலிருந்து வந்திருந்த 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு, சிங்கப்பூரில் முதன் முதலாக நடைபெற்ற மனிதாபிமான கருத்தரங்கில் இஞ்ஞாயிரன்று உரையாற்றிய பேராயர் நிக்கோலஸ் சியா இவ்வாறு கூறினார்.
சிங்கப்பூர் செல்வங்கள் கொழிக்கும் நாடு என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Chia, பிறரன்புச் சேவைகள் உலகில் நடக்க பல மனிதாபிமான நிறுவனங்கள் உலகில் இருந்தாலும், இறுதியாக இப்பணிகளை நிறைவுக்குக் கொண்டுவருவது தனிப்பட்ட மனிதர்களின் ஒட்டுமொத்த முயற்சியே என்று சுட்டிக் காட்டினார்.
ஒவ்வொரு மனிதரும் மதிப்புடன் வாழக்கூடிய வகையில் உலகச் சமுதாயத்தை உருவாக்குவது நம் அனைவரின் கடமை என்று இக்கூட்டத்தில் உரையாற்றிய அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைமைச் செயலர் Michel Roy கூறினார்.








All the contents on this site are copyrighted ©.