2011-09-06 15:01:03

செப்டம்பர் 07 வாழ்ந்தவர் வழியில்.... ஜார்ஜ் எல்ட்டன் மாயோ


ஜார்ஜ் எல்ட்டன் மாயோ, ஓர் ஆஸ்திரேலிய உளவியல் நிபுணர், சமூகவியலாளர் மற்றும் நிர்வாகக் கோட்பாட்டுயியலாளர். மனித உறவுகள் இயக்கத்தைத் தொடங்கியவர். “தொழில் வளர்ச்சியடைந்த கலாச்சாரத்தில் மனிதப் பிரச்சனைகள்” என்ற தலைப்பில் 1933ல் இவர் வெளியிட்ட புத்தகம் புகழ்வாய்ந்தது. உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பல ஆய்வுகளை மேற்கொண்டவர். நிறுவனங்களில் வேலைக்கு ஆட்களை எடுக்கும் போது நடத்தப்படும் நேர்காணலில் ஜார்ஜ் எல்ட்டன் மாயோ காட்டிய நடைமுறைகள் இன்றும் கடைபிடிக்கப்படுகின்றன. 1. நேர்காணலுக்கு வரும் ஆள்மீது முழுக்கவனம் செலுத்து. 2. பேசாதே, ஆனால் பேசுவதைக் கேள். 3. ஒருபோதும் விவாதம் செய்யாதே. ஒருபோதும் ஆலோசனை சொல்லாதே. 4. அவர் எதைச் சொல்ல விரும்புகிறார், எதைச் சொல்ல விரும்பவில்லை, உதவியின்றி அவரால் எதைச் சொல்ல முடியவில்லை என்பதைக் கவனி. 5. கேட்டுக் கொண்டிருக்கும் போதே நீ எந்தத் திருத்தங்களைச் சொல்ல விரும்புகிறாய் என்பதைத் திட்டம் போடு. இறுதியில் அவர் சொன்ன அனைத்தையும் தொகுத்து உனது கருத்தைத் தெரிவி. எப்போதும் எச்சரிக்கையுடன் செயல்படு.
வேலைக்கு ஆள் எடுக்கும் நிர்வாகிகளுக்கு இந்த ஐந்து ஆலோசனைகளைக் கூறிய ஜார்ஜ் எல்ட்டன் மாயோ, 1880 ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிறந்தார். 1949ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி காலமானார்.







All the contents on this site are copyrighted ©.