2011-09-03 15:08:14

புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயம் அதிகாரப்பூர்வமாகப் பசிலிக்காவாக அறிவிப்பு


செப்.03, 2011. புதுச்சேரிக்குப் பெருமை சேர்க்கும் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தை பசிலிக்கா என இவ்வெள்ளிக்கிழமை திருப்பீடத்தின் பெயரால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் இந்தியாவுக்கானத் திருப்பீடத்தூதர் பேராயர் சால்வாத்தோரே பென்னாக்கியோ.
இவ்விழா நினைவாக பசிலிக்கா பற்றிய சிறு வழிகாட்டுதல் நூலை இந்தியத் தூதர் வெளியிட பேராயர் அந்தோணி அனந்தராயர் பெற்றுக் கொண்டார்.
இச்சனிக்கிழமை இந்தியத் தபால்துறை உயர் செயலர் இராதிகா துரைசாமி சிறப்புத் தபால் உறையை வெளியிட்டார்.
இஞ்ஞாயிறன்று மாலை 7.15 மணிக்கு புதுச்சேரி கவர்னர், அமைச்சர் ராஜவேலு, பேராயர் அனந்தராயர் முன்னிலையில் பசிலிக்கா நினைவு மலர் வெளியிடப்படுகிறது.
இவ்வாலயத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களின் போது 2009ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதனைப் பசிலிக்காவாக உயர்த்த வேண்டுமென்ற விண்ணப்பம் கர்தினால் டெலஸ்போர் டோப்போவிடம் முன்வைக்கப்பட்டது. இதனை மைனர் பசிலிக்காவாக உயர்த்தும் பாப்பிறை ஆணைப் பத்திரம் 2011ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி பாண்டிச்சேரி பேராயர் இல்லத்திற்கு வந்தது. செப்டம்பர் 2, இவ்வெள்ளிக்கிழமை இப்புதிய பசிலிக்காவுக்குப் வந்த பேராயர் பென்னாக்கியோ, இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.







All the contents on this site are copyrighted ©.