2011-09-03 15:10:07

இலங்கையில் யானை கணக்கெடுப்பு


செப்.03,2011. இலங்கையில் பல ஆண்டுகள் உள்நாட்டுப் போர் இடம் பெற்றிருந்தாலும் அந்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக இவ்வெள்ளியன்று வெளியான புதிய கணக்கெடுப்பு கூறுகிறது.
சுமார் 1500 இடங்களில் 3500க்கும் மேற்பட்டோர் மூன்று நாட்களாக நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் இலங்கையில் மொத்தம் 5879 காட்டு யானைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இந்தக் காட்டு யானைகளில் 1100 க்கு அதிகமான குட்டி யானைகள் உள்ளன என்றும் தந்தம் உடைய யானைகள் 122 என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கு முந்தையக் கணக்கெடுப்பில் 5350 யானைகள் இருந்தன.
இலங்கையில் சாதாரணமாக மழை பெய்யத மாதமாகிய ஆகஸ்ட் மாதத்தில் பவுர்ணமியை ஒட்டிய நாட்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
குட்டி யானைகளை காட்டி இருந்து பிடிக்க இதுவரை அரசிடம் எந்த திட்டமும் இல்லை என்று அவர் கூறினார்.
1900மாம் ஆண்டில் இலங்கையில் சுமார் 12 ஆயிரம் யானைகள் இருந்தன. ஆனால் வேட்டையாடுதல் மற்றும் குடியிருப்பு வசதிகளால் அவ்வெண்ணிக்கை மிகவும் குறையத் தொடங்கியது.







All the contents on this site are copyrighted ©.