செப்.02,2011. பிலிப்பைன்ஸ் நாட்டு Negros Occidental மாநிலத்தில் ஏழை கிராம மக்கள் மத்தியில்
சேவை செய்து வரும் நிறுவனம் ஒன்றிற்கு இவ்வாண்டுக்கான ரமோன் மகசேசே விருது வழங்கப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது. AIDFI என்ற பூர்வீகஇன மக்கள் முன்னேற்ற அமைப்பு, ஆற்று நீரை
உயரமான குன்றுகளில் வாழும் ஏழை கிராம மக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல உதவும் தொழில்நுட்ப
உதவிகளைச் செய்து வருவதைப் பாராட்டும் விதமாக இவ்விருது வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
AIDFI குழாய்கள் மூலம் தினமும் 72 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உயரமான பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களுக்கு
அனுப்பப்படுகிறது. இதன் மூலம் 185 கிராமங்கள் பயனடைகின்றன. ஆசியாவின் நொபெல் விருது
எனக் கருதப்படும் ரமோன் மகசேசே விருது, பிலிப்பைன்ஸின் முன்னாள் அரசுத்தலைவர் ரமோன் மகசேசே
நினைவாக வழங்கப்படுகிறது. 1957ல் உருவாக்கப்பட்ட இவ்விருது ஐம்பதாயிரம் டாலர், ஒரு தங்கப்
பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.