2011-08-30 14:48:41

இஸ்பெயின் நாட்டில் உள்ள Pilar de la Horadada என்ற நகரின் ஒரு சாலைக்கு பாப்பிறை 16ம் பெனடிக்ட் பெயர் சூட்டப்படும்


ஆக.30,2011. இஸ்பெயின் நாட்டில் உள்ள Pilar de la Horadada என்ற நகரின் ஒரு சாலைக்கு பாப்பிறை 16ம் பெனடிக்ட் அவர்களின் பெயர் சூட்டப்பட உள்ளது.
அண்மையில் இஸ்பெயின் நாட்டில் நடந்து முடிந்த அகில உலக இளையோர் நாளையொட்டி, இந்நகர மக்கள் மற்ற நாடுகளில் இருந்து வந்திருந்த இளையோரைத் தங்கள் வீடுகளில் தங்கவைத்ததைப் பெருமைப்படுத்தும் வண்ணம் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அகில உலக இளையோர் நாளுக்கென பிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோருக்கு இந்நகரம் விருந்தோம்பல் மேற்கொண்டதைக் குறித்து தான் பெருமைப்படுவதாக அந்நகர மேயர் Jose Fidel Ros கூறினார்.
இந்நகரில் ஏற்கனவே ஒரு சாலைக்கு முன்னாள் திருத்தந்தை அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.