2011-08-30 14:50:35

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது


ஆக 30, 2011. "இந்தியாவில், ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது'' என்று, சென்னை மருத்துவக் கல்லூரி நீரிழிவுத் துறை பேராசிரியர் பெரியாண்டவர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில், முன்னாளில் நான்கு விழுக்காட்டு மக்களுக்கு, நீரிழிவு நோய் இருந்தது, தற்போது அது 14 விழுக்காடாக உயர்ந்துள்ளது. வரும் 2025ம் ஆண்டில், இது ஐந்திற்கு ஒருவர் என உயர வாய்ப்புள்ளது என்ற பேராசிரியர் பெரியாண்டவர், நீரிழிவு நோயால் புற்று நோய், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட, பல நோய்கள் வரும். இந்நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என மேலும் கூறினார்.
உணவில் கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை மூலம், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்றார் பெரியாண்டவர்.








All the contents on this site are copyrighted ©.