2011-08-23 15:00:34

விவிலியம் முழுவதையும் ஜப்பானின் பேச்சு வழக்கு மொழியில் மொழிபெயர்க்கும் பணி நிறைவுற்றுள்ளது.


ஆக 23, 2011. விவிலியம் முழுவதையும் ஜப்பானின் பேச்சுவழக்கு மொழியில் மொழிபெயர்க்கும் பணி 55 ஆண்டுகால அயரா உழைப்பிற்குப்பின் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
1956ம் ஆண்டு டோக்கியோவில் நிறுவப்பட்ட பிரான்சிஸ்கன் துறவு சபையின் கிளையினால் முடிக்கப்பட்ட ஜப்பான் வட்டார வழக்கு மொழியிலான விவிலியத்தை அச்சபையினரும், சலேசியர்களும் பவுலிஸ்ட் சபையினரும் இணைந்து வத்திக்கான் நூலகத்தலைவர் கர்தினால் ரஃபேல் ஃபரினாவிடம் ஒப்படைத்தனர்.
ஏற்கனவே 1950ம் ஆண்டுகளிலேயே இலத்தீன் மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ஜப்பான் மொழி விவிலியம் பயன்பாட்டில் இருக்கின்ற போதிலும், தற்போதுதான் மூலப்படிவத்திலிருந்து நேரடி மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது.
இம்மொழிபெயர்ப்புக்கான முழு நிதி உதவிகளையும், பிரான்சிஸ்கன் துறவு சபையும் அமெரிக்க ஐக்கிய நாடும் வழங்கியுள்ளன.








All the contents on this site are copyrighted ©.