2011-08-22 15:29:18

ஆக 23, வாழ்ந்தவர் வழியில்........


1774ம் ஆண்டு முதல் 1792 ம் ஆண்டு வரை பிரான்சின் மன்னராக ஆட்சி செய்தவர் பதினாறாம் லூயி. 1754 ம் ஆண்டு, ஆகஸ்ட் 23ம் தேதி பிறந்த இவரது இயற்பெயர் "லூயி-அகுஸ்தே"(Louis-Auguste) ஆகும். இந்தியாவிலிருந்து பிரித்தானிய ஆட்சியை ஒழிக்க ஹைதர் அலி, திப்பு சுல்தான் போன்ற அரசர்களுக்கும், இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போரில் ஹைதர் அலிக்கு உதவியாகவும் செயல்பட்டார், இன்னும், அந்நாள் சிலோன் ஆன இலங்கையில் பிரித்தானியர்களை எதிர்க்கவும் உதவினார் பதினாறாம் லூயி. இவரை முதலில் பிரெஞ்சு மக்கள் விரும்பியிருந்தாலும் இவரது ஆட்சித்திறமையின்மை மற்றும் நாட்டில் நிலவிய வறுமை, பட்டினி காரணமாக பெரும்பான்மையான மக்கள் போகப் போக இவர் மீதும் அவருடைய மனைவி மரீ ஆன்டெனெட் மீதும் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்தார்கள். எனவே பிரெஞ்சுப் புரட்சியின் போது இடம்பெற்ற எழுச்சியில் 1972 ம் ஆண்டு, ஆகஸ்ட் 10 ம் தேதி லூயி மன்னர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில் இவர் மீது அரசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு 1793ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி மக்கள் முன்னிலையில் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மறைவு பிரான்சில் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வர உதவியது எனலாம்.








All the contents on this site are copyrighted ©.