2011-08-19 16:38:24

இளம் அருட்சகோதரிகளுக்கான திருத்தந்தையின் உரை


ஆக 19, 2011. நற்செய்தி வழி நடப்பதில் தீவிரமாய்ச் செயல்படுவது என்பது, கிறிஸ்துவில் நாம் ஆழமாக வேரூன்றி அவரில் கட்டப்படுவதையும், விசுவாசத்தில் உறுதியுடன் இருப்பதையும் குறிக்கின்றது. துறவற அர்ப்பண வாழ்வில் இது, இயேசுவின் அன்பின் மூலத்திற்கு முழு இதயத்துடன் செல்வதையும், அவ்வன்பையே முதன்மையானதாகக் கொள்வதையும் குறிக்கின்றது. உங்கள் அர்ப்பண வாழ்விற்கான ஊட்டச்சத்தாக இருக்கும் இயேசுவுடனான தனிப்பட்ட சந்திப்பின் சாட்சியாக உங்கள் வாழ்வு அமையட்டும். அர்ப்பண வாழ்வுக்கே உரிய, நற்செய்தியை தீவிரமாக கடைபிடிக்கும் போக்கு, திருச்சபையுடனான குழந்தைகளுக்குரிய ஐக்கியத்திலும், மேய்ப்பர்களுடன் ஆன ஐக்கியத்திலும், உங்களின் துறவு சபையுடன் ஆன ஐக்கியத்திலும், திருச்சபையின் ஏனைய அங்கத்தினர்களுடன் ஆன ஐக்கியத்திலும் தன்னை வெளிப்படுத்துகின்றது. இறுதியாக, நற்செய்தியை தீவிரமாக பின்பற்றும் போக்கானது, இறைவன் நம்மிடம் ஒப்படைத்துள்ள பணிகளில் தன் வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது. அடைபட்ட மடங்களில் தியான வாழ்வை மேற்கொள்வோர், இறைவார்த்தையை தங்கள் வாழ்வில் வரவேற்று மௌனமாக தியானிக்கின்றனர். அப்போஸ்தலிக்க வாழ்வின் பல்வேறு பாதைகளில் விதைக்கப்படுள்ள இவ்விதையானது, குழந்தைகள் மற்றும் இளையோருக்கான கல்வி, முதியோர் மற்றும் நோயாளிகள் மீதான அக்கறை, குடும்பங்களுக்கான மேய்ப்புப்பணி, வாழ்வை மதிப்பதற்கான அர்ப்பணம், உண்மைக்கான சாட்சியமும் அமைதி மற்றும் பிறரன்பு குறித்த அறிவிப்பும், மறைப்பணி மற்றும் புதிய நற்செய்தி அறிவித்தல் என திருச்சபையின் அப்போஸ்தலப் பணிகளின் மேலும் பல துறைகளிலும் முளைத்து பலன் தருகிறது, என்ற திருத்தந்தை, அன்பு சகோதரிகளே, இறைவன் அழைப்பு விடுக்கும் புனிதத்துவத்திற்கான சாட்சிகளாக விளங்குங்கள் எனக் கேட்டு தன் உரையை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.