2011-08-18 16:03:56

அமெரிக்காவில் புகையிலை நிறுவனங்கள் வழக்கு


ஆக.18,2011. அமெரிக்காவில் புகையிலை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக அந்நிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன.
2012ம் ஆண்டு செப்டம்பர் முதல் அமெரிக்காவில் விற்கப்படுகின்ற புகையிலை உற்பத்திப் பொருட்களில், புகைப்பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கத்தைக் கைவிடத் தூண்டும் வகையான எச்சரிக்கைப் படங்கள் இடம்பெற வேண்டும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு விதிகளை வகுத்துள்ளது.
புகைப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு இறந்தவர் ஒருவரின் சடலம், புகைப்பழக்கத்தால் அரித்துப்போன பல்வரிசை போன்ற படங்களும் இவற்றில் அடங்கும்.
புகைப்பழக்கத்துக்கு எதிரான அரசின் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு சின்ன விளம்பர அட்டையாக சிகரெட் அட்டைகள் மாற வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று சிகரெட் நிறுவனங்கள் குற்றம்சாட்டுகின்றன.
வர்த்தக ரீதியில் செயல்படுவதற்கு தமக்குள்ள உரிமையை இந்த புதிய விதிமுறைகள் தடுக்கின்றன என்றும், புதிய விதிமுறைகள் தமது பேச்சுரிமையை மீறுவதாகவும் வாதிடக்கூடிய வழக்கு ஒன்றை அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் புகையிலை நிறுவனங்கள் தொடுத்துள்ளன.
ஆனால் அரசில் உள்ளவர்களும், புகைப்பழக்கத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்களும் இந்த புதிய விதிமுறைகளை வரவேற்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.