2011-08-17 15:20:17

மியான்மாரில் Aung San Suu Kyiக்கும் அரசுக்கும் இடையே உருவாகியுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து கிறிஸ்தவக் குழுக்கள் கருத்து


ஆக.17,2011. மியான்மாரில் Aung San Suu Kyiக்கும் அரசுக்கும் இடையே உருவாகி வரும் பேச்சுவார்த்தைகள் நாட்டுக்கு நல்ல விளைவுகளைத் தருமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று அந்நாட்டு கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.
ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 12 ஆகிய நாட்களில் Suu Kyi க்கும் மியான்மார் தொழில்துறை அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக அமைந்தன என்று அரசுத் தரப்பில் அறிக்கைகள் வெளியாயின.
பாதுகாப்பு கருதி தங்கள் பெயர்களை வெளியிட விரும்பாத கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்கத் தலைவர்கள், இந்தச் சந்திப்புக்கள் குறித்து பேசுகையில், அகில உலகின் கண்டனங்களை இதுவரை பெற்றுவந்த மியான்மார் அரசு தற்போது இப்பேச்சு வார்த்த்கைகள் மூலம் பிற நாடுகளின் நல் மதிப்பைப் பெரும் ஒரு முயற்சியாக இப்பேச்சுவார்த்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனவோ என்ற தங்கள் சந்தேகத்தைத் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.