நவீன காலத்தின் மிகப்பெரும் அவல நிகழ்வு, கலாச்சாரங்களின் சீரழிவே என்கிறார் பேராயர்
மேனாம்பரம்பில்.
ஆக 16, 2011. இன்றைய காலத்தின் மிகப்பெரும் அவல நிகழ்வு என்பது, கலாச்சாரங்களின் சீரழிவே
என்றார் இந்தியாவின் கௌகாத்தி பேராயர் தாமஸ் மேனம்பரம்பில். உலகமயமாக்கல் என்ற கொள்கையின்
கீழ் தங்கள் சொந்த கலாச்சாரத்திலிருந்து விலகிச்செல்லும் மக்கள், அதனோடு இணைந்து தங்கள்
பாரம்பரிய அறநெறி மதிப்பீடுகளையும் இழக்கிறார்கள் என்ற பேராயர், சமூக உணர்வுகளும் உறவுகளும்
காணாமற்போவதாகவும் கவலையை வெளியிட்டார். வடகிழக்கு இந்தியாவின் சமூகவியல் குறித்த
ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் மேனம்பரம்பில், இன்றைய நவீனப்போக்குகள்
இப்படியேத் தொடர்ந்தால் அடிப்படை ஆதாரமற்ற தனிமனிதர்களையும், தனித்தன்மைகளை இழந்த குழுக்களையும்
கொண்ட ஒரு சமூகத்தையே நாம் பிற்காலத்தில் கொண்டிருப்போம் என்றார்.