2011-08-16 16:04:04

உலகின் மக்கள் தொகையுள் மூன்றில் ஒரு பகுதியினர், மதக் கட்டுப்பாடுகளை அனுபவித்தவர்கள்


ஆக 16, 2011. உலகின் மக்கள் தொகையுள் மூன்றில் ஒரு பகுதியினர், மதவழிபாடுகள் மற்றும் மத வெளிப்பாடுகள் குறித்த தங்கள் அரசுகளின் கட்டுப்பாடுகளை அனுபவித்தவர்களாக உள்ளார்கள் என்கிறது அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று.
'மதம் மீதான கட்டுப்பாடுகளின் அதிகரிப்பு' என்ற தலைப்பில் உலகம் முழுவதும் மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, உலகின் 198 நாடுகளில் 23 நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாகவும், 12 நாடுகளில் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளதாகவும், 163 நாடுகளில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கிறது.
மதங்கள் மீதான அரசுக் கட்டுப்பாடுகளை அதிகம் கொண்டுள்ள 10 நாடுகளாக, எகிப்து, ஈரான், சவுதி அரேபியா, உஸ்பெகிஸ்தான், சீனா, மாலத்தீவுகள். மலேசியா, மியான்மார், எரிட்ரியா மற்றும் இந்தோனேசியாவை சுட்டிக்காட்டியுள்ளது இவ்வறிக்கை.








All the contents on this site are copyrighted ©.