2011-08-15 14:14:11

பெண்கள் மீதான வன்முறை வளர்ச்சியை தடுக்கிறது: சூரிக் மாநாட்டில் வலியுறுத்தல்


ஆக.15, 2011. பெண்கள் மீதான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் பெண்களுக்கு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என சூரிக் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
சுவிஸ் அரசுத் தலைவர் மிச்சேலின் கள்மி ரே மற்றும் மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதர் நவநீதம்பிள்ளை கலந்துகொண்ட இம்மாநாட்டில் பேசிய தலைவர்கள், காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் ஆயிரக்காணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிட்டனர்.
யுகோசுலோவியாவில் போர் நடந்த போது 50 ஆயிரம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாயினர், மற்றும் காங்கோவில் தினமும் பல நூறு பெண்கள் பாலியல் கொடுஞ்செயலை எதிர்நோக்குகின்றனர் என்று சுவிஸ் அரசுத் தலைவர் கள்மி ரே கவலையுடன் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.