2011-08-15 14:10:25

ஐந்து மாதங்கள் கடந்தும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முல்லைத்தீவு மக்கள் கவலை


ஆக 15, 2011. போரினால் இடம்பெயர்ந்த வடக்கு மக்கள் மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச் செல்லப்பட்டு ஐந்து மாதங்களாகிவிட்ட போதிலும், தமது சொந்த இடங்களுக்கு இன்னும் தங்களை அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் கருநாட்டுக்கேணி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவில் இருந்து ஏறத்தாழ 18 மைல் தொலைவில் உள்ள கொக்கிளாய் பகுதியில் அதிகாரிகள் தங்களை ஒரு வெட்டவெளியில் கூடாரங்களில் தங்க வைத்துள்ளதாகவும், அங்கு தண்ணீர் உட்பட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்பன பற்றாக்குறையான நிலையிலேயே இருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கள் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக கண்ணி வெடி அகற்றும் நிறுவனங்கள் அறிவித்திருந்ததையடுத்தே, கடந்த மார்ச் மாதம் தங்களை தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகள் மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வந்த போதிலும், இன்னும் தங்களை மீள்குடியேற்றம் செய்யவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாததன் காரணமாகவே மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.







All the contents on this site are copyrighted ©.