2011-08-12 15:09:38

ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளுக்கு உதவுமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை வேண்டுகோள்


ஆக.12,2011. கடந்த அறுபது ஆண்டுகளில் தற்சமயம் கடும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளுக்கான இடர்துடைப்புப் பணிகளுக்கு ஆதரவு கொடுக்குமாறு அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தலத்திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் திமோத்தி டோலனும் CRS என்ற அமெரிக்கக் கத்தோலிக்க நிவாரணப் பணிகள் அமைப்புத் தலைவர் ஆயர் ஜெரால்டு கிகானாசும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்ரிக்க நாடுகளுக்காக அமெரிக்கப் பங்கு மக்களிடம் நிதி திரட்டுமாறு மேய்ப்பர்களைக் கேட்டுள்ளனர்.
கென்யா, சொமாலியா, எத்தியோப்பியா ஆகிய கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒரு கோடியே 20 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
இந்நாட்டு மக்கள் பசி, தாகம், நோய், வறட்சி போன்றவற்றால் கடுமையாயத் துன்புறுவதாக ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.