2011-08-09 15:21:48

புதிய கண்டுபிடிப்புகளின் விளைவால் விலங்குகளின் எண்ணிக்கை குறைவு: துணைவேந்தர் பேச்சு


ஆக.09,2011. புதுப் புது கண்டுபிடிப்புகளின் விளைவால், ஆண்டுதோறும் 1 கோடி விலங்குகள் அழிக்கப்பட்டு வருவதாக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுடலைமுத்து கூறினார்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற "பசுமை தயாரித்தலில் நவீன முறைகள்' குறித்த இரண்டு நாள் கருத்தரங்கில் உரையாற்றிய துணைவேந்தர், அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நீர், நிலம், காடு ஆகியவற்றை சேதப்படுத்தாமலும், வருங்காலச் சந்ததியினரைக் காப்பாற்றும் வகையிலும் இருக்க வேண்டும் என விண்ணப்பித்தார்.
ஒவ்வொரு நாளும் உருவாகும் புதுப் புது கண்டுபிடிப்புகளுள் சிலவற்றின் மூலம் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு, அதனால், ஆண்டுதோறும் 1 கோடி விலங்குகள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், பசுமைக் கண்டுபிடிப்புகள் மூலம் புவியைக் காப்பாற்ற முடியும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுடலைமுத்து.








All the contents on this site are copyrighted ©.