2011-08-09 15:12:39

பாகிஸ்தான் காரித்தாஸின் வீடு கட்டிக் கொடுக்கும் பணி துவங்கியுள்ளது


ஆக.09,2011. பாகிஸ்தானின் தென் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 500 வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்தத் துவங்கியுள்ளது காரித்தாஸ் பாகிஸ்தான் அமைப்பு.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் ஹஜி ஜானோ மசி கிராமத்தில் வீடுகளுக்கான அடிக்கல்லை நாட்டி உரையாற்றிய பாகிஸ்தான் காரித்தாஸ் இயக்குனர் ஷாமாஸ் ஷமௌன், ரமதான் மாதத்தையொட்டிய பரிசாக இதனை இஸ்லாமிய மக்களுக்கு வழங்குவதாகவும், 2,500 வீடுகளைக் கட்டுவதற்கான தங்கள் திட்டத்தின் முதல் தவணையே இந்த 500 வீடுகள் எனவும் கூறினார்.
கடந்த ஆண்டின் வெள்ளப்பெருக்கால் பாகிஸ்தானில் பாதிக்கப்பட்டவர்களுள் 44 ஆயிரத்து 670 குடும்பங்களுக்கு உதவியுள்ளது காரித்தாஸ் அமைப்பு. இதில் 2,950 தவிர ஏனைய அனைத்தும் இஸ்லாமியக் குடும்பங்களே







All the contents on this site are copyrighted ©.