2011-08-08 15:58:14

பிலிப்பீன்ஸில் அரசுக்கும் இஸ்லாமியப் புரட்சியாளர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் குறித்த உண்மைத் தகவல்களுக்குத் தலத்திருச்சபை அழைப்பு


ஆக.08, 2011. பிலிப்பீன்ஸில் அரசுக்கும் இஸ்லாமியப் புரட்சியாளர்களுக்கும் இடையேயான அமைதி முயற்சிகளை வரவேற்கும் அதேவேளை, இரு தரப்பினருக்கும் இடையேயானப் பேச்சுவார்த்தைகள் ஒளிவு மறைவு இன்றி இடம்பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள்.
இஸ்லாமிய விடுதலை முன்னணியின் தலைவர்களுக்கும் அரசுத்தலைவர் பெனினோ அகீனோவிற்கும் இடையே எவ்வித முன்னறிவிப்புமின்றி ஜப்பானில் இடம்பெற்ற இரகசியக் கூட்டம் குறித்து கருத்து தெரிவித்த பிலிப்பீன்ஸின் ஓய்வுபெற்ற பேராயர் ஆஸ்கார் குரூஸ், இஸ்லாமியப் புரட்சியாளர்களுடன் இடம் பெற்ற சந்திப்பின்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என அரசுத்தலைவரை விண்ணப்பித்துள்ளார்.
அரசு எடுக்கும் முடிவுகளால் பாதிக்கப்படும் வாய்ப்புடைய பூர்வீக குடிமக்கள், மற்றும் இஸ்லாமிய, கிறிஸ்தவச் சமூகங்களுக்கு, இப்பேச்சுவார்த்தைகளின் போது பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார் தலைநகர் மணிலாவின் துணை ஆயர் Broderick Pabillo







All the contents on this site are copyrighted ©.