2011-08-08 15:52:22

ஆகஸ்ட் 09 வாழ்ந்தவர் வழியில்.....


ஹெர்மன் ஹெசே என்ற ஜெர்மானியர், கவிஞர், நாவலாசிரியர் மற்றும் ஓவியர். Steppenwolf, Siddhartha, The Glass Bead Game ஆகிய இவரது படைப்புக்கள் மிகவும் முக்கியமானவை. இவர் எழுதிய Siddhartha என்ற நாவல், தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 1946இல் இலக்கியத்துக்கான நொபெல் விருது, 1955இல் ஜெர்மன் புத்தக வணிகத்தின் அமைதி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். ஹெசேயின் பெற்றோர், பேசில் மிஷன் என்ற ஒரு பிரிந்த கிறிஸ்தவ சபையின்கீழ் இந்தியாவில் மறைப்பணியாற்றியவர்கள். ஹெசே நான்கு வயதுச் சிறுவனாக இருந்த போதே இவரது அசாதாரணத் திறமையைக் கணடு இவரது தாய் வியந்து இவரது தந்தைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். 1895, அக்டோபர் 17ல் ஜெர்மனியின் Tubingen ல் புத்தகக்கடையில் வேலையில் சேர்ந்தார். அச்சமயத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களுடைய இறையியல் நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்படியே அவரது எழுத்தார்வமும் வளர்ந்தது. ஜெர்மனியில் இவரது பெயரில் பல பள்ளிகள் உள்ளன. 1877ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி பிறந்த ஹெர்மன் ஹெசே, 1962ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி காலமானார்.







All the contents on this site are copyrighted ©.